மாடித்தோட்டம் முள்ளங்கி சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக முள்ளங்கி பயிரிடும் முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றை இந்த பகுதியில் நாம் மிகவும் தெளிவாக படித்தறிவோம். தொட்டிகள்: மாடித்தோட்டம் முள்ளங்கி சாகுபடி பொறுத்தவரை இதற்கு தொட்டி அல்லது பைகளை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். கிழங்கு வகை என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் கிழங்கு வளர ரொம்ப எளிதாக இருக்கும். மண் இறுகிப்போகும் பிரச்சனை இருக்காது. விதைத்தல்: மாடித்தோட்டம் முள்ளங்கி சாகுபடி பொறுத்தவரை நேரடியாகவே நடவு செய்யலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நீர் நிர்வாகம்: மாடித்தோட்டம் முள்ளங்கி சாகுபடி பொறுத்தவரை விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். மாடித்தோட்டம் முள்ளங்கி சாகுபடி – உரங்கள்: காய்கறி கழிவுகள், டீத்தூள், முட்டை ஓடு ஆகியவற்றை...