Posts

Showing posts from July, 2019

மாடித்தோட்டம் முள்ளங்கி சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

Image
மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக முள்ளங்கி பயிரிடும் முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றை இந்த பகுதியில் நாம் மிகவும் தெளிவாக படித்தறிவோம். தொட்டிகள்: மாடித்தோட்டம் முள்ளங்கி சாகுபடி பொறுத்தவரை இதற்கு தொட்டி அல்லது பைகளை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். கிழங்கு வகை என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் கிழங்கு வளர ரொம்ப எளிதாக இருக்கும். மண் இறுகிப்போகும் பிரச்சனை இருக்காது. விதைத்தல்: மாடித்தோட்டம் முள்ளங்கி சாகுபடி பொறுத்தவரை நேரடியாகவே நடவு செய்யலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நீர் நிர்வாகம்: மாடித்தோட்டம் முள்ளங்கி சாகுபடி பொறுத்தவரை விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். மாடித்தோட்டம் முள்ளங்கி சாகுபடி – உரங்கள்: காய்கறி கழிவுகள், டீத்தூள், முட்டை ஓடு ஆகியவற்றை...

மாடித் தோட்டத்தில் கீரைச் செடியை எப்படி வளர்க்கலாம்?

Image
முதலில் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஒரு நல்ல இடம் தேர்வு செய்ய வேண்டும் . பிறகு அந்த இடத்தில் குறைந்தபட்சம் இரண்டிற்கு இரண்டடி நீல அகல வீதம் , அரையடி உயரமுடைய ஒரு தொட்டி போல் அமைக்க வேண்டும் . இத தொட்டியில் தான் நாம் கீரை செடிகளை பயிர் செய்யப் போகிறோம் . நமது தேவைக்கேற்ப வித விதமான கீரைகளான , சிறு கீரை , தண்டுக் கீரை , பசலைக் கீரை , பொன்னாங்கண்ணிக் கீரை , வெந்தயக் கீரை மற்றும் அரைக் கீரை போன்ற கீரை வகைகளை நாம் பயிரிடலாம் . கீரை வளர்ப்பிற்கு மிக முக்கியமாக தேவைப்படும் கரைசல் ஒன்றை எப்படி செய்வது என்று பார்ப்போம் . இக்கரைசலுக்கு தேவையான பொருட்கள் , ஒரு கிலோ கிராம் பப்பாளிப் பழம் , ஒரு கிலோ கிராம் பரங்கிப் பழம் , ஒரு கிலோ கிராம் நன்கு கனிந்த நாட்டு வாழைப் பழம் , பிறகு ஒரு நாட்டுக் கோழி முட்டை மற்றும் ஒரு கிலோ கிராம் உருண்டை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை . முதலில் ஒரு மூடியுடன் கூடிய ஒரு பேரலை (barrel) எடுத்துக் கொள்ளவும் . பேரல் பிளாஸ்டிக்கில் இருப்பது நலம் . பிறகு ஒரு கி...

மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடலாம் வாங்க..!

Image
பொதுவாக நம் மாடித்தோட்டத்தில் பலவகையான பயிர்களை பயிரிடுவது எதற்காக ? நம் அத்தியாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ள மற்றும் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை முறையில் நம் மாடித்தோட்டத்தில் பயிரிடுவதால் நமக்கு எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்குத்தான். பொதுவாக நாம், நம் மாடித்தோட்டத்தில் பலவகையான பயிர்களை பயிரிடுகின்றோம். அந்த வகையில் இன்று நம் மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடும் முறை பற்றி தெளிவாக காண்போம். மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் சாகுபடி செய்ய தேவைப்படும் பொருட்கள்: Grow Bags  அல்லது  Thotti அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா. நாற்றுகளை உருவாக்குவதற்கான குழித்தட்டுகள் நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான் தொட்டிகள் தேர்ந்தடுக்கும் முறை: தேர்ந்தெடுக்கப்படும் பை அல்லது தொட்டிகளானது 10 கிலோ கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தொட்டிகளில் 8 கிலோ வரை மண், மணல், தென்னை நார் கழிவு, மட்கிய குப்பை ஆகியவற்றை நிரப்ப வேண்டும். நாற்றுகளை உரு...

மாடித்தோட்டம் கருவேப்பிலை சாகுபடி முறை..!

Image
கருவேப்பிலை  வாசனைக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்க்காகவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இவற்றை நம் மாடிதோட்டத்தில் பயிரிட்டால் நமக்கு அதிக வருமானமும், அதிக நன்மையையும் கிடைக்கும். மாடிதோட்டத்திம் பயிரிட தேவைப்படும் பொருட்கள்: Grow Bags  அல்லது  Thotti அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா. விதைகள், குழித்தட்டுகள் பூவாளி தெளிப்பான். மாடித்தோட்டம் தொட்டிகள்: இதற்கு தொட்டி அல்லது பைகளை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அடியுரமாக ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். தொட்டி அல்லது பைகளில் பாதியளவு வரை இவற்றை இட்டு நிரப்ப வேண்டும். தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் மண் இறுகாமல் இலகுவாக இருக்கும். மாடித்தோட்டம் கருவேப்பிலை சாகுபடி – விதை விதைக்கும் முறை: மாடித்தோட்டம் கருவேப்பிலை சாகுபடி பொறுத்தவரை  குழிதட்டுகளில் தென்னை நார்க்கழிவு நிரப்பி அதில் ஒரு விதை வரை ஊன்ற வேண்டும். விதைத்தவுடன் நீர் தெளிக்க வேண்டும். த...

வீட்டிலேயே வளர்க்க வேண்டிய அற்புதமான மூலிகை செடிகள் !!

Image
இதுவரை எந்த ஒரு மூலிகை வேண்டுமென்றாலும் நீங்கள் நாட்டு மருந்து கடை அல்லது எங்கயாவது தேடி அலைய வேண்டியிருக்கும் . ஆனால் உங்கள் அழகான வீட்டிலேயே பலன் தரக்கூடிய சில மூலிகை தாவரங்களை உங்கள் வீட்டிலேயே வளர்த்து பயன் பெறலாம் . இந்த மூலிகை செடிகள் தான் தற்போது ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது . இது நம்முடைய உடலுக்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது . இது ரெம்ப பாதுகாப்பான முறையாக இருப்பதோடு செலவு குறைந்த முறையும் கூட . துளசி :-   மேலும் இது ஹோலி பேசில் என்றும் அழைக்கப்படுகிறது . இதன் மருத்துவ குணங்களில் தலை சிறந்து இருப்பதால் மூலிகை செடிகளின் ராணி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது . இதை அப்படியே அல்லது ஹெர்பல் டீ யாக போட்டு சாப்பிடலாம் . இந்த துளசியில் நான்கு வகைகள் உள்ளன . ராம துளசி , வன துளசி , கிருஷ்ணா துளசி , கற்பூர துளசி . இதில் கற்பூர துளசி பெரும்பாலும் வெளிபயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது . கற்பூர துளிசி எண்ணெய் ...