மாடித்தோட்டம் கருவேப்பிலை சாகுபடி முறை..!
கருவேப்பிலை வாசனைக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்க்காகவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இவற்றை நம் மாடிதோட்டத்தில் பயிரிட்டால் நமக்கு அதிக வருமானமும், அதிக நன்மையையும் கிடைக்கும்.
மாடிதோட்டத்திம் பயிரிட தேவைப்படும் பொருட்கள்:
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண்,
- பஞ்சகாவ்யா.
- விதைகள், குழித்தட்டுகள்
- பூவாளி தெளிப்பான்.
மாடித்தோட்டம் தொட்டிகள்:
இதற்கு தொட்டி அல்லது பைகளை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அடியுரமாக ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
தொட்டி அல்லது பைகளில் பாதியளவு வரை இவற்றை இட்டு நிரப்ப வேண்டும். தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் மண் இறுகாமல் இலகுவாக இருக்கும்.
மாடித்தோட்டம் கருவேப்பிலை சாகுபடி – விதை விதைக்கும் முறை:
மாடித்தோட்டம் கருவேப்பிலை சாகுபடி பொறுத்தவரை குழிதட்டுகளில் தென்னை நார்க்கழிவு நிரப்பி அதில் ஒரு விதை வரை ஊன்ற வேண்டும். விதைத்தவுடன் நீர் தெளிக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
50 முதல் 60 வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். தொட்டியின் அளவைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டு நாற்றுகளை நடவு செய்யலாம்.
உயிர் நீர் பாசனம்:
மாடித்தோட்டம் கருவேப்பிலை சாகுபடி பொறுத்தவரை நாற்று நட்டவுடன் தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்பு காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் ஈரப்பதத்தை பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
தேவைப்படும் உரங்கள்:
மாடித்தோட்டம் கருவேப்பிலை சாகுபடி முறை பொறுத்தவரை சமையலறை கழிவுகளை மக்கவைத்து உரமாக இடலாம்.
பஞ்சகாவ்யா 10 மில்லி எடுத்து கொண்டு இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்துகொண்டு வாரம் இருமுறை தெளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு முறை:
மாடித்தோட்டம் கருவேப்பிலை சாகுபடி பொறுத்தவரை இலைகளில் பூச்சி தாக்குதல்காய் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணிரில் கலந்து ஊற்ற வேண்டும்.
இந்த முறை சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.
வேப்பெண்ணை, வேப்பங்கொட்டை சாறு, வேப்பம் பிண்ணாக்கு சாறு கலந்து பயிர்களில் தெளித்தால் புழுக்கள் கட்டுப்படும்.
அறுவடை:
மாடித்தோட்டம் கருவேப்பிலை சாகுபடி முறை பொறுத்தவரைதேவைப்படும் பொழுது இளந்தளிர்களை கிள்ளி எடுக்க வேண்டும். முற்றிய இலைகளை அவ்வப்போது நீக்கி கவாத்து செய்ய வேண்டும்.
கருவேப்பிலையின் பயன்கள்:
கருவேப்பிலை நன்மைகள்: 1
- தினமும் சிறிதளவு கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.
கருவேப்பிலை நன்மைகள்: 2
- வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது.
கருவேப்பிலை நன்மைகள்: 3
- குமட்டல் மற்றும் தலைசுற்றலை குணப்படுத்தும்.
கருவேப்பிலை நன்மைகள்: 4
- சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
கருவேப்பிலை நன்மைகள்: 5
- கண்பார்வையை மேப்படுத்தும்.
கருவேப்பிலை நன்மைகள்: 6
- இந்த கருவேப்பிலை சாறு தினமும் அருந்தி வர இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும். மேலும் பத்திய உணவு சாப்பிடுபவர்கள் இந்த கருவேப்பிலையை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
கருவேப்பிலை நன்மைகள்: 7
- கருவேப்பிலையை நன்கு கரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை அவற்றுடன் கலந்து தலை முடியில் நன்கு தேய்த்து குளித்து வர தலை முடி நன்றாக வளரும்
Want to install Terrace Garden in your home???/
pls click:- https://www.facebook.com/enmaadithottam
Comments
Post a Comment