மாடித் தோட்டம் அமைப்பது எப்படி?

மாடித் தோட்டம் என்றவுடன் நம் நினைவில் இருப்பது மேற்கூரை (காங்கிரீட்) பாதுகாப்பாகும் . மேற்கூரையை பாதுகாப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள்.


மாடியில் உள்ள தளத்தில் இரப்பர் கோட் பெயிண்ட் அடிக்க வேண்டும்.


அதிக கனம் இல்லாத ஜாடிகள், மண் தொட்டி என்றால் டெரகோட்டா மண் தொட்டி, மாடித் தோட்டத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் தொட்டிகள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட பெயிண்ட் வாளிகள் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.


இடுபொருள்கள்
தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கும், மாட்டுச்சாணம் ஒரு பங்கும், சமையலறை கழிவு ஒரு பங்கும் இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.


காய்கனிகள் தேர்வு செய்தல்
மாடித் தோட்டத்திற்கு நாட்டு காய்கனிகள் மிகச் சிறந்தவை.
வெண்டைக்காய், மிளகாய், கொத்தவரங்காய் , கத்தரிக்காய், மிளகாய், தக்காளி , அவரை, பூசணி, சுரைக்காய், புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை பயிரிடலாம்.




பழ மரங்கள்
மாதுளை, கொய்யா, வாழை


பூ மரங்கள்
இட்லிபூ (வெட்சி), செவ்வரளி, மஞ்சளரளி


பூச்செடிகள்
பூச்செடிகள் என்றால் மல்லிகை, முல்லை, பிச்சி, ரோஜா, சாமந்தி (செவ்வந்தி), சம்மங்கி


கீரை வகைகள்
கொத்தமல்லி, புதினா, பாலாகீரை, காசினிகீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, வெந்தயக் கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை, பொன்னாங்கனிக்கீரை, மிளகுதக்காளிக்கீரை.

Comments

Popular posts from this blog

மாடி தோட்டத்தில் கத்தரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் !!!

உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா? பகுதி – 2

மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடலாம் வாங்க..!